ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை எளிதாக கவர்கிறது. ஆப்பிள் அறிவிக்கும் சலுகை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு உற்சாகம் மேலோங்கும் வகையில் தற்போது குறைந்த விலையில் புதிய சலுகையை வழங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்பிள் பொருளுக்கான ”ஆப்பிள் டேஸ்” சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஆப்பிள் போன்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்துவோருக்கு ஐபோன் 11 சீரிஸ்ஸுக்கு ரூபாய் 5,400 ரூபாய் வரையும், ஐபேட், மேக்புக்குக்கு 7000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.