தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்று, கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் இதற்கு எதிரான வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், 6 லட்சத்து 78 ஆயிரத்து க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிகமான நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி அதிகமானோரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.65 லட்சம் பேர் நோயால் பாதிக்கப்பட்டு 1.13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 68 ஆயிரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 800, திருவள்ளூர் மாவட்டத்தில் 5000, மதுரையில் 4000 என்ற எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,059பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 117915ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.