Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50ஆவது நாளாக….. அதிர்ச்சியை கொடுத்த கொரோனா மரணம் ….!!

தமிழகத்தில் இன்று மட்டும் 78 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக உலகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 180க்கும் அதிகமான நாட்டு மக்களை பழி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது இந்த கொடிய வைரஸ்.

நாட்டிலேயே அதிகபட்ச உயிரிழப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழநாடு, குஜராத், கர்நாடகா, உ.பி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 2,403பேர் கொரோனா இறப்பு நிகழ்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் 1,404 பேர் உயிரிழந்துள்ளநிலையில், செங்கல்பட்டு – 186, திருவள்ளூர் – 154, மதுரை – 147என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் இன்று மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 2481ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 4,059பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 117915ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50ஆவது நாளாக உயிரிழப்பு இரட்டை இலக்கில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Categories

Tech |