Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…வீண் அலைச்சல் உண்டாகும்…பயம் விலகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று மனதில் கருணை தன்மை அதிகரிக்கும். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் வரவேற்ப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அன்புள்ளம் கொண்டு செயல்படுங்கள். உபரி பண வருமானம் இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வி பற்றிய பயம் விலகிசெல்லும். மற்றவரிடமிருந்து தேவையான உதவிகளும் கிடைக்கும்.

புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது  நல்லது. காரியத்தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம். பலன்கள் அனைத்து விஷயங்களிலும் நன்மை இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். வீண்  வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மனம்திருப்தி  அடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஓரளவு அதிர்ஷ்டம் மிக்க நாளாகவே இருக்கும்.

பெண்களால் யோகமான சூழலும் அமையும். காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |