கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. முன் பதிவு செய்யப் பட்டவர்களின் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரயில் கட்டண முன்பதிவு கட்டணம் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .
ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்தால் முன்பதிவு செய்தவர்கள் மதுரை கோட்டயம் ரயில் நிலையத்தில் நாளை முதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தூத்துக்குடி, புனலூர், கோவில்பட்டி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் 9 – 10 வரை முன்பதிவு கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.