Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பூசல்கள் சரியாகும்…திறமை வெளிப்படும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று உங்களுடைய செயல்களில் திறமை இருக்கும். அரசு தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் வந்து சேரும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் கொஞ்சம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பூசல்கள் சரியாகும்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய செய்யும். மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்து உண்ணுங்கள்.

இன்று மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை எப்பொழுதுமே மேற்கொள்ளுங்கள். அதை வாடிக்கையாக்கிக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை உங்களுக்கு அதிஸ்டதையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |