Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பிரச்சனைகள் சரியாகும்…தேவையான உதவிகள் கிடைக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று உங்களுடைய செயல்களில் அதிக நன்மை நிறைந்து காணப்படும். அரசு தொடர்பான உதவிகள் பெற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகளும் சரியாகும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் திறமைக்கேற்ற சில விஷயங்கள் நடைபெறும். இன்று ஓரளவு மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். எந்த ஒரு முயற்சியும் முன்னேற்றமே இன்று ஏற்படும். திருமண வாழ்க்கைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.

இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |