கடந்த நான்கு மாதமாக நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் கங்கணம் கட்டி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் ? எப்போது இதிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புகளோடு ஒவ்வொரு நாளையும் உலக நாடுகள் கடந்து வரும் நிலையில், இந்தியா இதற்கு சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் 100 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிக்க உள்ளனர். ஐ.சி.எம்.ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.