Categories
சினிமா

எப்போதும் என் சம்பளம் குறைவுதான்… கொரோனா காலத்தில் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை – நடிகை வரலட்சுமி சரத்குமார்.

குறைவாகவே சம்பளம் வாங்கி வரும் தான் கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், தற்போது ‘ஆன்லைன்’ தளத்திலேயே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘டேனி’ படமானது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘ஜீ5 ‘ என்ற தளத்தில் வெளிவர இருக்கின்றது. அதைப்பற்றி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது கருத்துக்களை கூறியுள்ளார். தற்போது நடித்த டேனி படத்தில் கொலையை விசாரணை செய்யும் காவல் அதிகாரியாக நடித்துள்ளேன். அதில் டேனி என்கின்ற நாயானது எனக்கு துணையாக நடித்துள்ளது. நம் நாட்டில் தான் படத்தில் நடிப்பவர்களின் முக்கியத்துவத்தை பார்க்கின்றார்கள். வெளிநாடுகளில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ‘சேவ்சக்தி’ என்ற அமைப்பின் மூலமாக என்னால் முயன்ற உதவிகளை பலருக்கு செய்து வருகிறேன். மேலும் தான் குறைவான சம்பளத்தையே வாங்கி கொண்டிருக்கிறேன் எனவும் கொரோனா காரணத்தினால் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயத்தில் விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் தன் அப்பா கட்சியில் சேராமல் தனியாகவே அரசியலில் இறங்குவதாகவும் வரலட்சுமி சரத்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

Categories

Tech |