Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு… இந்தியர் ஒருவர் படுகாயம்…!!

பீகார் எல்லையில் நேற்று திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தியாவின் நட்பு நாடாக விளங்கி வரும் நேபாளம் சமீப காலமாக தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார். குறிப்பாக இந்தியாவின் எல்லை பகுதிகளை நேபாளம் உரிமை கோரி வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் இந்திய நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றாக பீகாரின் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் உள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் செல்வதற்கு இந்த மாவட்டத்தில் சோதனை சாவடிகள் நிறுவப்பட்டு இருநாட்டு காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த நேபாள போலீசார் திடீரென எதிர்பாரா நேரத்தில் கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிபார்த்து  துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேபாள் போலீசாரின் இந்த எதிர்பாராத திடீர் துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கும் இரு நாட்டு எல்லை பிரச்சனைக்கும்  எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சில மாதங்களாகவே இந்திய எல்லை பகுதிக்குள் நேபாள படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்துக்கொண்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Categories

Tech |