மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரிலுள்ள முலுண்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) தடுப்பு மருந்து ஊசியினை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்களுக்கு (எஃப்.டி.ஏ) தகவல் கிடைத்தது.
இதுபற்றி, உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர் அருண் உன்ஹேல் கூறுகையில், இதுபோன்ற சட்ட விரோதமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. இதற்கு முன்னதாக, மீரா சாலையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து 4 தடுப்பு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பாந்த்ராவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தாளர் தான் இந்த மருந்தை அவர்களுக்கு வழங்கியதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறியுள்ளார்.