பிரிட்டன்கள் அனைவரும் இத்தகைய செயலை பின்பற்றினால் கொரோனா அதிகரிக்காது என ONS தலைவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் கொரோனா ஊரடங்கு பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்காத நாடாக பிரிட்டன் உள்ளது என தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தலைவர் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாம் அனைவரும் கவனத்துடன் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால், கொரோனா வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதேசமயத்தில் பேராசிரியர் சர் இயன் டயமண்ட் கூறும்போது, இலையுதிர் காலத்திற்கு பின்னர் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் விரைவான மற்றும் நீடித்த வி-வடிவ பொருளாதார மீட்சியானது கொரோனாவிற்கு பின்னர் சாத்தியமாகும்.
அதே சமயத்தில் இது எப்போது நிகழும் என கூறுவது மிக விரைவானது என சர் இயன் கூறியிருக்கின்றார். பொருளாதார மீட்சிக்கான பல்வேறு அறிகுறிகளை கண்டுள்ளோம் எனவும் உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆனது 8 சதவீதம் வரையில் திரும்பி இருக்கிறது என்றும் விருந்தோம்பல் மற்றும் தங்குமிடம் ஆகிய துறைகள் அனைத்தையும் மீட்பதற்கு பெரும்பாடு பட வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.