Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே பரிதாபம்.! செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..!!

பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்..

அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் சுமதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சிறுவர்கள் இருவரும் செங்கல் சூளையிலுள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் நீரில் இறங்கி அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பின்பு அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |