பின்னர் போலீசார் அந்த வீட்டில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவனது பெயர் சேத்தன் என்பதும், தனது நண்பரான சந்திரா நாயக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது.. இதையடுத்து ஒப்புக்கொண்ட அவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டதில் சந்திரா நாயக்கை, துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக சேத்தன் கூறினான்.. இதையடுத்து மாநில காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே மோப்ப நாய் துங்காவுக்கு மாலை அணிவித்து அதன் தலையை தடவிக்கொடுத்து பாராட்டினார். அப்போது சக போலீசாரும் கைதட்டி பாராட்டினர். இதுதொடர்பான போட்டோஸ் சமூகவலை தளங்களில் வெளியாகி பலரது ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து துங்காவை பராமரித்து வரும் சிவநாயக்கா என்ற காவலருக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.. இதுகுறித்து சிவநாயக்கா கூறியதாவது, பொதுவாக மோப்ப நாய்கள் அனைத்துமே 3 – 4 கி. மீட்டர் தூரம் தான் மோப்பம் பிடித்துக்கொண்டு ஓடும். ஆனால் துங்கா 12 கிலோ மீட்டர் நிற்காமல் மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடிக்க உதவி செய்துள்ளது. சிறப்பு வாய்ந்த மோப்ப நாயான துங்காவால் இன்னும் 15 ஆண்டுகள் காவல் துறையில் சேவை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.