வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவை பின்னடையச் செய்யும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இணையம் வழியாக மட்டும் வகுப்பு நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வருகையை ரத்து செய்யும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தது. இது பற்றி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படி நிர்வாகத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக இந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நிர்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவு அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் ஒரு புதிய வெற்றி கிடைத்திருந்தாலும், டிரம்ப் நிர்வாக நடவடிக்கையால் உலகின் தலைச்சிறந்த அறிஞர்களை உருவாக்கும் இடம் அமெரிக்கா என்று நற்பெயரை இழக்கும் அபாயம் ஏற்பட்திருப்பதாக பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
குடியேற்றத்தை தடுக்க இந்த நிர்வாகத்தினுடைய தொடர் முயற்சிகள் “வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு இல்லை” என்ற செய்தி அனுப்பி இருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக தலைவர்கள் கூறுகிறார்கள். 2016ஆம் ஆண்டு அதிபராக டிரம்ப் பதவியேற்றத்திலிருந்து அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுடைய எண்ணிக்கை 10 சதவீதமாக குறைந்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்து வரும் இந்நிலையில் அமெரிக்கா தற்போது பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.