Categories
உலக செய்திகள்

என்னுடன் வீட்டிற்கு வா… விவாகரத்து செய்த மனைவியை அழைத்து சென்ற கணவன்… பின்னர் நடந்த கொடுமை…!!

விவாகரத்து செய்த மனைவியை  கணவன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவருக்கு மஞ்சிதர் கவுர் என்ற மகள் உள்ளார். மஞ்சிதர் ககந்தீப் என்பவரை சென்ற 2016 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் ககந்தீப் மது அருந்த தொடங்கியதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற ஓராண்டிற்கு முன்னதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு மஞ்சுதர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தன் தந்தையுடன் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மஞ்சுதர் பணிபுரிகின்ற இடத்திற்கு சென்ற ககந்தீப் தந்திரமாக பேசி அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு அழைத்துச் சென்ற ககந்தீப் அவரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் மஞ்சுதரின் தந்தையை அவர் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள உரிமையாளர் தொடர்புக்கொண்டு தங்கள் மகளை ககந்தீப் அழைத்து சென்றார் என கூறியுள்ளார். இச்செய்தியை அறிந்த ஜஸ்விதர், ககந்தீப் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது தன் மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுந்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மஞ்சுதரின் உடலை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மஞ்சுதரின் தந்தை அவருக்கு இரண்டாம் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதனால் கோபமுற்ற ககந்தீப், மஞ்சுதரை கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாகி உள்ள ககந்தீப்பை போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |