மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறநகரிலுள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் கடந்த மாதம் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்.. பிரீத்தியின் கணவரான ககன் குடிபோதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.. ப்ரீத்தியின் பெற்றோர் அவர் வசித்துவரும் பகுதிக்கு அருகிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் வீட்டிலிருந்த மனைவி ப்ரீத்தி மற்றும் தனது 2 குழந்தைகளை ககன் சுத்தியலால் கொடூரமாக அடித்துள்ளார்.. இதில் பலத்த படுகாயமடைந்த ப்ரீத்தி ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து ப்ரீத்தியின் பெற்றோர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் மகள் சடலமாகவும், அவரது 9 வயது மகன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதேபோல் 5 வயதான மகள் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலங்களை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.. மேலும் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொன்று விட்டு தப்பியோடிய ககனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.