Categories
உலக செய்திகள் கொரோனா

“அம்மாவை பாக்கணும்” கொரோனாவால் உயிரிழந்த தாய்… கண்கலங்க வைத்த இளைஞனின் செயல்..!!

கொரோனாவால் உயிரிழந்த தாயை மகன் மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சமீபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரஸ்மி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான தனது அம்மாவை பார்க்க ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்ததும் கதறி அழுது தாயை நேரில் பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இவருக்கும் தொற்று பரவிவிடும் என்பதால் மருத்துவர்கள் ஸ்வைட்டியை அவரது தாயை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் மருத்துவமனையில் இறந்து போன தனது தாயை ஜிகாத் அல் ஸ்வைட்டி  ஜன்னல் ஏறி அமர்ந்து  சோகமாக  பார்த்த காட்சி மருத்துவமனையில் உள்ளவர்களை கண்கலங்க வைத்துள்ளது. 30 வயதாகும் இந்த இளைஞன்  மருத்துவமனை ஜன்னலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |