Categories
உலக செய்திகள்

“Nuts” சாப்பிட்ட மணப்பெண் மரணம்…. குடும்பத்தினர் கூறிய காரணம்…!!

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவை உட்கொண்டு திருமணக்கோலத்தில் இருந்த மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் Alexandra Erokhova என்ற 25 வயது உடைய பெண்ணுக்கும் ஒரு இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நடந்தது. அந்நிகழ்ச்சியில் Alexandra Erokhova உணவுகளில் வைக்கப்பட்ட இனிப்பு வகையை உட்கொண்டுள்ளார். அச்சமயத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உண்டானது. இதனைக் கண்டு பதறிய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். அப்போது மருத்துவ குழுவினர் மணப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைக் குறித்து மருத்துவர்கள் கூறும்போது, Anaphylatic shock என்ற ஒவ்வாமை காரணத்தால்தான் இவர் உயிரிழந்தார் என கூறினர்.

சிறுவயதில் இருந்தே Alexandra உணவில் ‘nuts’ சேர்க்கப்படாத உணவையே சாப்பிடுவார். இந்நிலையில் சமையல் உரிமையாளரிடம் இது பற்றி முன்னரே கூறியிருந்த நிலையில், அவர்கள் உணவில் nut-ஐ சேர்த்திருக்கின்றனர். இத்தகைய காரணத்தினால்தான் அலெக்ஸாண்ட்ரா உயிரிழந்தார் என அவர் உறவினர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |