ஸ்கேட்டிங் வீராங்கனை I Love… என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தன் நான்கு வயது முதலே ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெற்று பின்னர் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தவர் எகடரினா. இவர் ரஷ்யா மாஸ்கோவில் பிறந்தவர். இதனை தொடர்ந்து 2017 இல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பங்கேற்று இணையர் பிரிவினில் தங்கம் வென்று சாதித்துள்ளார். பின்னர் ரஷ்யாவில் பிறந்த இவர் ஃபிகர் ஸ்கேட்டிங் பயிற்சி மேற் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் வென்ற தங்கப்பதக்கங்கள் அனைத்துமே ஆஸ்திரேலியாவிற்கு வென்றவையாகும்.
இந்நிலையில் சென்ற சனிக்கிழமை அன்று ரஷ்ய மொழியில் ‘ஐ லவ்’ என்று எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ரஷ்ய ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ள செய்தியில், எகடரினா ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்தார் என கூறியுள்ளது. இதுகுறித்து எகடரினா பயிற்சியாளர் ஆண்ட்ரி கூறும்போது, 2018 ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியாவிற்காக பங்கேற்றபோது ‘எகடரினா மிகுந்த மன அழுத்தத்தோடு காணப்பட்டார்” என கூறினார். பிறகு சென்ற ஜனவரி மாதத்தில் இருந்தே பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் செய்தியாளர்களிடம் கூறினார். எகடரீனா இறப்பிற்கு தடகள உலகம் முழுவதும் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றது.