Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…? ஹால்டிக்கட் இருந்தா பாஸ் பண்ணுங்க…. உயர்நீதிமன்றத்தில் மனு….!!

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு புறம் வகுப்புகள் நடைபெற்று வர, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கலாமா அல்லது தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், தேர்வை நடத்துவது சாத்தியமற்றது. தேர்வு குறித்த முடிவை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென மத்திய அரசிடம் ஏற்கனவே கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர், பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு குறித்து மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு அனைத்தும் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு கிட்டத்தட்ட ஜனவரி மாதம் ஆகிவிடும். அதேபோல் தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்களும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்பதால்,இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து ஹால்டிக்கெட் பெற்ற அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |