தமிழக்தில் கொரோனா காலத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன குறிப்பாக. திமுக இதனை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதுதொடர்பான விளக்கங்களை அளித்து அரசியல் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளது. அரசு மின் கட்டணத்தை வைத்து கொள்ளை அடித்துள்ளது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்த நிலையில் மின் சார துறை அமைச்சர் தங்கமணி இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்,தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவரும் முதல் 100 யூனிட் இலவசமாக தரப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும், ஆனால் 300 யூனிட்டுக்கு கேரளாவில் 1165, மகராஷ்டிராவில் 1776 மின் கட்டணம் வசூலிக்க படுவதாகக் கூறியுள்ளார்.