ஐபிஎல் போட்டி விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸ்டார் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் சென்ற மார்ச் 29-ல் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணத்தால் காலவரை இல்லாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. அதில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐபிஎல் 2020 தொடரினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகைய முடிவானது ஐபிஎல் ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஸ்டார் இந்தியா தெரிவித்த காரணம் என்னெவென்றால், ஐபிஎல் போட்டிகளை தீபாவளி வருகின்ற திகதியை சார்ந்து நடத்தினால் தங்கள் சார்பில் அதிக அளவு விளம்பரங்களை தர முடியும் என கூறியுள்ளனர். அதேசமயத்தில் இத்தகைய போட்டியானது 44 நாட்களில் 60 போட்டிகள் நடத்தக்கூடிய நிலையில், அதிகமாக மதியநேர போட்டிகளே நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது குறைவாகவே காணப்படும் எனவும் ஸ்டார் இந்தியா தகவல் அளித்துள்ளது.