தேவையான பொருட்கள்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய்- 7
வெள்ளை ரவை – 100 கிராம்
நெய் – 30 மில்லி
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ்(உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு – 2
பிஸ்தா – 2
செர்ரி பழம் – 2
செய்முறை விளக்கம்:
ஒரு வாணலியை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.
முந்திரி, திராட்சையை நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பால் சேர்த்து நன்றாக காச்சவும் நன்றாக காய்ந்ததும். வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்து கிளற வேண்டும்.
பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கிளறி, சர்க்கரை உருகி கேசரி பதத்துக்கு வந்த பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
அதன் பிறகு பாதாம் பருப்பு,பிஸ்தா, செர்ரி ஆகியவற்றை வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறலாம்.
முக்கிய குறிப்பு:
கேசரிக்கு நிறம் வேண்டும் என விரும்பினால் பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூ அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப்பூவை தூவியும் செய்யலாம்.