Categories
மாநில செய்திகள்

45 வயதில் பிரதமராக விருப்பமா….? சச்சின் பைலட்டை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்…!!

45 வயதிற்குள்ளேயே பிரதமராக விரும்புகிறாரா? என்று சச்சின் பைலட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் நடந்த அதிகார மோதலில், சச்சின் பைலட் அவர்கள் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் இரண்டு பேர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் சச்சின் பைலட்டிடமிருந்து பறிக்கப்பட்டது. சச்சின் பைலட் பாஜகவில் தான் சேரவில்லை என்று கூறினாலும், சச்சின் பைலட்டை பாஜக இயக்குவதாக அவர் உதவியை கொண்டு ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக அசோக் கெலாட் குற்றம் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா சச்சின் பைலட்டை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் கேட்கிறேன் 45 வயதிற்குள் சச்சின் பைலட் பிரதமராக விரும்புகிறீர்களா? ஒரு பக்கம் கொரோனா தலை விரித்து ஆடுகிறது; மறுபக்கம் சீனா எல்லையில் பெரும் தொல்லையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய மோசமான நிலையில் ராஜஸ்தான் முதல்வர் இருக்கையில் அமர்வதற்கு ஏன் அவசரப்படவேண்டும்? 27 வயதில் எம்.பி, 32 வயதில் மத்திய அமைச்சர், 37 வயதில் மாநில காங்கிரஸ் தலைவர், 41 வயதில் துணை முதல்வர், அதனையடுத்து 43 வயதில் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்ற தாங்கள் பா.ஜ.கவில் சேர்ந்து 45 வயதில் பிரதமராக விரும்புகிறீர்களா? என்று சச்சின் பைலட்டை  மார்கரெட் ஆல்வா கேள்விக்கேட்டுள்ளார்.

அதே சமயத்தில், “ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காங்கிரஸ் கட்சியை எவராலும் அழிக்க இயலாது. காங்கிரஸ் கட்சிக்கு 150 ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இத்தகைய காலத்தில் நாங்கள் வென்றோம், தோற்றோம், சிறைகளுக்கும் சென்றோம், அதிகாரத்தையும் அனுபவித்தோம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்” என்று மார்கரெட் ஆல்வா அவர்கள் சச்சினை கடுமையான முறையில் கண்டித்துள்ளார்.

Categories

Tech |