தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இணையதளம் வாயிலாக அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் மாணவர்களுக்கு மிகப் பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் தொடக்கம் இன்று மாலை தொடங்கியது. இணையதளம் வாயிலாக பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. www.tngasa.in, www.tndceonline.org இல் ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். இளநிலை படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆகஸ்டு 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 000- 223510 14 / 223510 15 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை அறியலாம்.