ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதுமே 150க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 150 தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உடைய கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்காக ஏராளமான நிதியை அரசு ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் அரசே 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்கான பணத்தையும் ஏற்கவே கொடுத்திருந்தது.
இந்நிலையில் 1077தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் உடம்பில் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டு, தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டது. அவர்களின் உடம்பில் கொரோனவை தடுக்கக்கூடிய ஆற்றலை கொடுக்கும் ஆன்டிபாடி உருவாகி, கொரோனவை தடுக்கும் வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்ததுள்ளது. அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது போன்ற பரிசோதனைகள் நடத்த படும் போது அவற்றினுடைய புள்ளிவிவரங்கள் வெளியிட வேண்டும்.
அந்தவகையில் 1077 பேருக்கும் என்ன நடத்தப்பட்டது ? அவர்களுடைய உடலில் எதிர்ப்பாற்றல் எந்த அளவுக்கு உருவாகி இருக்கிறது ? என்ற விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் மட்டுமே உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதை ஏற்றுக்கொள்வார்கள். அந்த அடிப்படையில் தற்போது அந்த பரிசோதனையின் புள்ளிவிவரங்களை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 1077 பேருக்கும் கிடைத்திருக்க கூடிய எதிர்ப்பாற்றல் என்பது நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு தகவலாக இருக்கின்றது. இதனால் கூடிய விரைவில் ஒரு தடுப்பு மருந்து நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.