Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் கவலை..!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அதாவது, 117 நாட்களுக்குப் பிறகு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று தற்போது விளையாடி வருகிறது.

மைதானத்தில் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில்  இந்தாண்டு நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

அதேபோல 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபரில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.. அதேசமயம் இந்தாண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |