Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகும்னு நினைக்கல… கண் முன் இறந்த குழந்தை… கண்ணீருடன் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..!!

விளையாடும் பொழுது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் கண்களை தானமாக கொடுக்க அவளது பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரா-சுலேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் சினேகா என்ற மகள் இருந்தால். இந்நிலையில் குழந்தை சினேகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சினேகாவை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தன் மகனின் மரணத்தை பார்த்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பின்னர் தனது குழந்தையின் கண்களை தானமாக வழங்க முடிவெடுத்து அவர்கள் கூறியபோது, எங்கள் மகள் இறந்து விட்டாலும் இந்த உலகத்தை. அவள் பார்ப்பாள் இதன் மூலமாக 2 குழந்தைகளின் சிரிப்பை எங்களால் பார்க்க முடியும். நாங்கள் எங்களுடைய கண்களை தானம் செய்வதற்கு முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்கு முன் எங்களது குழந்தையின் கண்ணை தானமாக கொடுப்போம் என்று ஒரு நொடியும் சிந்தித்துப் பார்த்ததில்லை என கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |