மலை ஏற்றத்திற்கு சென்ற பெண்கள் கரடியை கண்டு அச்சத்தில் அசையாமல் நின்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது
மெக்சிகோவில் இளம்பெண்கள் சிலர் மலை ஏற்றத்திற்கு சென்றனர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்று நிற்பதை கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எங்கே தாங்கள் ஓடினால் கரடி விரட்டி வந்து தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் கரடி அருகில் வந்தும் அமைதியாக அவர்கள் இருந்தனர். அவர்களின் அருகே வந்த கரடி இரண்டு காலில் எழுந்து நின்று பெண்ணொருவரின் தலைமுடியை மோப்பம் பிடித்த காணொளி சமூக தளத்தில் வெளியாகி உள்ளது.
பின்னால் நிற்கும் கரடி தன்னை எப்போது தாக்கும் என்று தெரியாமல் அசட்டு தைரியத்தில்நின்ற பெண் கரடியுடன் தன்னை செல்ஃபி எடுப்பதும் அந்த காணொளியில் பதிவாகியிருந்தது. கரடி பெண்ணை மோப்பம் பிடிக்க அச்சமயம் அந்தப் பெண் அசைந்து விட கரடி அவரைத் தீண்டி விட்டு அங்கிருந்து நகர்கின்றது. இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்த அந்தப் பெண்கள் ஓட்டம் பிடித்தது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.