கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஒரு மாநிலமும் தப்பாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேற்கு வங்கத்தின் நேற்று புதிதாக 2282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 769 ஆக உயர்ந்தது. இதில் 26 ஆயிரத்து 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1147 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 204 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வாரம் வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் மேற்கு வங்கம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.