லிப்டில் எதிர்பாராத விதமாக சிக்கிய தாய் மற்றும் மகள் நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
சீனா நாட்டில் தாயும் மகளும் குடியிருந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் இருந்த லிப்ட் மூலமாக மாடிக்கு இருவரும் சென்ற போது எதிர்பாராத விதமாக லிப்ட் வேலை செய்வது நிறுத்தப்பட்டது என சீனா ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது. இவ்விபத்தில் 84 வயதுடைய தாயாரும் அவரின் 64 வயதுடைய மகளும் சிக்கிக் கொண்டனர். அப்போது சத்தமிட்டு பலரை அழைத்த போதும் உதவிக்கு யாரும் வராமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிகழ்வை தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக இருவரும் சிறுநீரை சேமித்து குடித்திருக்கின்றனர். பின்னர் 93 மணி நேரங்களுக்கு பின்னர் தாயார், மகள் இருவரும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஜியான் நகரில் இருக்கின்ற கயாக்சின் என்ற மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சாதாரண உடல்நிலைக்கு திரும்பிய பின் இத்தகைய சம்பவம் வெளிவரும். இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இவர்கள் இருவரும் அவர்களின் சமயோசித முடிவினாலே, பழுதடைந்த லிப்டில் நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் சிக்கிக் கொண்ட போதிலும் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என கூறினார்.