Categories
உலக செய்திகள்

“நான் முக கவசம் அணிந்துள்ளேன்” என்னைவிட யாருக்கு தேசப்பற்று அதிகம் – ட்ரம்ப் பெருமை

தான் முக கவசம் அணிந்து இருப்பதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு தன்னைவிட அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அதில் இருந்து தங்களைப் மீட்க ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த கிருமி தொற்று இருப்பவர்களின் சுவாசத்தின் மூலமாக பரவுவதால் முகக்கவசம் என்பது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும்  செய்தியாளர்களை சந்திக்கும் போதும் முகக்கவசம் இல்லாமல் சுற்றியுள்ளார். அவருடைய நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா வந்த போது கூட அவர் முகக்கவசம் அணியமுன்வரவில்லை.

பல்வேறு தரப்பினர்களின் விமர்சனங்களை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவர் முகக்கவசம் அணிந்துள்ளார். தற்போது முகக்கவசம் அணிவதை டிரம்ப் தேசப்பற்றுடன் ஒப்பிடுகிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், “நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற இயலாத சூழலில் முகக் கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் கூறி வருகின்றனர். அதிபரான என்னை விட அதிக தேசப்பற்று உள்ளவர் யாரும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |