Categories
சினிமா தமிழ் சினிமா

நாடு திரும்பிய விஜய் மகன்…. ஸ்டார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமை…. இறுதியில் பெற்றோருடன் இணைந்த மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவிற்கு உயர்கல்வி படிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் காரணமாக ஊரடங்கு ,போக்குவரத்து முடக்கம் போன்ற பல கட்டுப்பாடுகள் கனடா நாட்டிலும் விதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதை நினைத்து நடிகர் விஜய் கவலையில் மனமுடைந்தார் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சஞ்சய் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் இருக்கின்ற அமெரிக்க சர்வதேச பள்ளியில் முடித்தார். இவர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயுடன் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார் மற்றும் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தனது பட்டப்படிப்பை முடித்து  தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது

விமானத்தின் மூலமா சென்னைக்கு வந்த சஞ்சய் 14 நாட்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இரு  தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சஞ்சயின் வருகையால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Categories

Tech |