இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஆதரிப்பதில் கங்குலியை தொடர்ந்து விராட் தான் என்று இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும்போது, “விராட் கோலி கங்குலியை போன்றே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு தருபவர் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பவர். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். அதை வெளிப்படையாக அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரயம் ஷ்வான், ரிஷப் பந்த் பற்றி பாராட்டிப் பேசுகையில், “கிரிக்கெட் விளையாடும் இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இர்ஃபான் பதான் சொல்வது சரிதான். ரிஷப்க்கு நல்ல ஆதாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் அவர் ஆடிய டெஸ்ட் போட்டியில் நினைவில் உள்ளதா? அவர் களத்தில் இறங்கி சந்தித்த முதல் பந்தோஅல்லது இரண்டாவது பங்தோ சுழற்பந்து வீச்சாளர்களின் தலைக்கு மேல் சிக்ஸ்க்கு பறந்தது. இந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விசேஷமான ஒருவர்
என்று அப்போது நினைத்தேன். ஏனெனில் அவர் மிகவும் இளமையானவர். அதேசமயம் தனித்துவத்துடன் ஆடுபவர். அவரை ஆதரிக்கும் அணி அவரை சுற்றி இருக்கிறது” என்று பேசியுள்ளார்.