பெண் தீவிரவாதி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தண்டிக்கப்பட வேண்டுமென அவரது தாயாரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்தேசத் தலைநகரான டாக்காவில் சில நாட்களுக்கு முன் ஆயிஷா ஜன்னத் மோஹோனா என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவர் ஜமத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தானியாகாலி என்ற பகுதியில் வசித்து வரும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் பிரக்யா தேவ்நாத். அவர் மீது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது தீவிரவாத குழுக்களின் ஆட்களை சேர்த்தது, பணம் திரட்டியது போன்ற பல்வேறு வழக்குகள் ஆயிஷா மீது போடப்பட்டுள்ளன. இதனைப் பற்றி தானியாகாலி பகுதியில் உள்ள ஆயிஷாவின் தாய் கீதாவிடம் கேட்ட போது, “ஆயிஷா 2016 ஆம் ஆண்டில் வீட்டைவிட்டு சென்றதாகவும் அதற்குப் பின் வீடு திரும்பவில்லை எனவும் செல்போனும் சுவிட்ச் ஆப் இல் இருந்ததால் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் கூறினார்.
அதற்குப் பின்னர் சில நாட்களுக்கு பிறகு தனக்கு போன் வந்தது எனவும் அதில் பிரக்யா “நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து வங்கதேசத்தில் இருப்பதாக கூறினார்”. அதற்கு பின் அந்த எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயிஷா தானியாகாலியில் இருந்தபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பினை படித்துக்கொண்டிருந்தார் எனவும் திடீரென அவரினுள் தீவிரவாத எண்ணம் எப்படி வந்தது என அறிய முடியவில்லை எனவும் கூறினார். அதே சமயத்தில் ஆயிஷா தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததை தான் விரும்பவில்லை. எனவே தன் மகளை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென தனது விருப்பத்தை கூறியுள்ளார்” ஆயிஷாவின் தாயார் கீதா.