தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4985 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 1.75 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தலைநகர் சென்னையில் கொரோனா தோற்று நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் குறைந்து வருகின்றது.
இந்த நிலையில்தான் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.இதற்க்கு தலைமை நீதிபதி சாஹி கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்த்தை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.