Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் செல்வதற்கு தடை உத்தரவு – அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சென்னையில் மையம் கொண்டிருந்தது. பின்னர் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான தடுப்பு நடவடிக்கையால் சென்னை கொரோனா பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருந்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தமிழக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மீன் விற்பனை செய்ய வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், வியாபாரிகள் அவர்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |