Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்..! மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர்..!!

மதுபோதைக்கு அடிமையான நபர் தனது மனைவி மற்றும் மகளைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் 2ஆவது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சீனிவாசன்.. 40 வயதுடைய இவருக்கு விஜயலஷ்மி (40) என்ற மனைவியும், நேத்ரா என்ற மகளும் உள்ளனர்.. வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிய இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. மேலும் அடிக்கடி மனைவியிடம் பணம் வாங்கி, குடித்து வந்துள்ளார்..

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுடைய மனைவியிடம் ஈஷா யோகா மையத்திற்குச் செல்வதற்கு பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. இதில் தான் மறைத்துவைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தன்னுடைய மனைவியை சீனிவாசன் சரமாரியாக குத்தியுள்ளார். இதனைக் கண்ட மகள் நேத்ரா தடுக்க முயன்ற போது, அவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் சீனிவாசன்..

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நந்தம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிட்லபாக்கம் போலீசார், சீனிவாசனைக் கைதுசெய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |