Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அருகே… பிரபல ரவுடி வெட்டிக்கொலை… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது மதுரை மாநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்தநிலையில், இன்று அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முத்துக்குமாரை கொடூரத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்..

இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீசாருக்குத் தகவலளித்தனர். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார், முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த கொலை குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

Categories

Tech |