ஜாவா நிறுவனம் இந்தியாவில் பெராக் மோட்டார் சைக்கிளை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது.
இந்தியாவில் புதிய ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளை கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகம் துவங்கி உள்ளது. ஜாவா பெராக் முதல் மாடல் ஐதராபாத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஜாவா பெராக் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் இதன் உற்பத்தி மற்றும் விநியோக பணிகள் தடங்களாகின.
இந்திய சந்தையில் ஜாவா மோட்டார் சைக்கிளின் மாடல் விலை ரூபாய் 1.94 லட்சம் எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள்களின் , சிங்கிள் சிலிண்டர், 334 சிசி , லிக்விட் கூல்டு என்ஜின், வழங்கப்பட்ட நிலையில் இந்த எஞ்சின் 30 பிஹெச்பி பவர், 31 என்எம் டார்க் செயல்திறன் வழக்கப்படுகிறது.