தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழுமுடக்கம் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முழு முடக்கம் அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.