Categories
உலக செய்திகள்

3 வயது பிஞ்சுக் குழந்தை… கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. “எங்கள் அழகு குழந்தை” கதறும் பெற்றோர்….!!

மூன்று வயது குழந்தை மீது ரிவர்ஸ்சில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பிரியா கபூர் கிங் என்ற குழந்தை Warwickshireஇல் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அக்குழந்தையின் மீது ரிவர்ஸில் வந்த கார் ஒன்று மோதியதால்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நிலையில் பிரியாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனையடுத்து Leamington ஐச் சேர்ந்த 32 வயது பெண்ணை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்கு மீண்டும் வரவேண்டியிருக்கும் எனக்கூறி அவரை விட்டுவிட்டார்.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த யார் வீட்டு cctv கமெராவிலும் மற்றும் காரில் உள்ள டேஷ் கேமிலோ பதிவானால் அந்த வீடியோவை கொடுத்து உதவுமாறு அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியா குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் எங்கள் அழகான குழந்தை தற்போது மிக அழகிய தேவதையாக மாறி விட்டாள் என கூறினர். எங்களது வீட்டு முன்னரே பிரியா இறந்து போனதால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை எங்கள் மொத்த குடும்பத்தில் உள்ளவர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருக்கின்றோம். எனவே எங்களது தனிமைக்கு மதிப்பளியுங்கள் என பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |