Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி – 10 மணி வரை மட்டுமே செயல்படும். மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |