சிம்ம ராசி அன்பர்களே…! இன்று பணம் இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் நீங்கள் செயல்பட வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். ஆனால் உங்களுடைய பேச்சில் நிதானம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். கோபத்தை தயவு செய்து விட்டு ஒழியுங்கள். காரிய அனுகூலம் இருக்கும். எதற்கெடுத்தாலும் கோபம் இன்று வெளிப்படும். எல்லா வித வசதிகளும் இருக்கும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும்.
உங்களுடைய அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மன தைரியம் கூடும், மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கி காணப்படும். இன்று நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான் உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பொறுமையாக செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.