Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மனக்கவலை உண்டாகும்…அறிவு திறன் அதிகரிக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!   எந்த ஒரு காரியத்திலும் கண்டிப்பாக கவனம் என்பது வேண்டும். செயல்பாடுகளை கொஞ்சம் தடைகள் ஏற்படலாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக செயல்படுங்கள். கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்பட கடன்களும் அதிகமாகவே இருக்கும். கடின உழைப்பால் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்காதீர்கள்.

பஞ்சாயத்துக்களில் ஏதும் கலந்து கொள்ளாதீர்கள். அதேபோல தேவையில்லாத வாக்குவாதங்களில் கண்டிப்பாக  இன்று நீங்கள் செய்ய வேண்டாம். நினைத்த காரியத்தை செய்து முடிக்க கொஞ்சம் கடுமையாக உழைப்பது தேவைப்படும். அதிக முயற்சிகள் தேவைப்படும். வீண் மனக்கவலை உண்டாகும். உங்களுடைய அறிவு திறனும் அதிகரிக்கும். சில காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

புதிதாக காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |