Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது.

கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பால் விற்பனை, மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அரசு உத்தரவுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |