இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 51,066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,35,645 ஆக இருக்கின்றது. இன்று கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இன்று 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..
தமிழகத்தில் மாவட்ட வாரியான இன்றைய கொரோனா உயிரிழப்பு :
சென்னை-21
மதுரை -7
திருவள்ளூர் – 6
திருச்சி – 6
செங்கல்பட்டு – 5
தேனி – 4
சிவகங்கை – 3
ராணிப்பேட்டை – 3
தி.மலை – 3
வேலூர் – 3
அரியலூர்-2
ராமநாதபுரம்-2
காஞ்சிபுரம்-2
க.குறிச்சி -2
தூத்துக்குடி-1
நெல்லை- 1
கடலூர் -1
திருப்பத்தூர் – 1
கரூர் -1
நாமக்கல் -1
தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தாலும், 4800க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கிறது.. தற்போது தமிழகத்தில் 51,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..