பராமரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி சென்ற சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
கனடாவில் உள்ள கோஹரனே நகரை சேர்ந்தவர் டியானா (Tianna TT Medicine shield) என்ற 13 வயது சிறுமி கடந்த 19 ஆம் தேதி அவரை பராமரித்துக்கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து திடீரென தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி குறித்து அடையாளமாக டியானா 5 அடி உயரம் கொண்டவர், பழுப்புநிற கண்கள் கொண்டவர் அதோடு அவர் கடைசியாக சாம்பல் நிற ஸ்வட்டர் மற்றும் கருப்பு நிற பேண்ட் போட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி டியானாவினுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரைவில் அவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிறுமி குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.