Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சென்னையில் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை அடுத்து அதிகம் தொற்றுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்க்கு ஏற்றவாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வர்த்தகர்கள் ஆலோசனைப்படி ஜூலை 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை (எட்டு நாட்களுக்கு) தளர்வில்லா பொது முடக்கம் அமுலாகயுள்ளது. மருந்து கடைகள், பால் விற்பனையாகங்கள் மட்டும் இயங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |